You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அமெரிக்காவில் டிரம்புக்கான ஆதரவு குறைய இரான் போரும் ஒரு காரணமா?
இரான் போர் தொடரும் நிலையில், அவர் இரண்டாம் முறை பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் டிரம்பின் பிரபலத்தன்மை மெதுவாக குறைந்து வருகிறது.
அமெரிக்க அதிபருக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
டிரம்ப் மீண்டும் அதிபரானபோது, அரசியல் பகுப்பாய்வாளர் நேட் சில்வரின் கருத்துக்கணிப்பு சராசரிப்படி, சுமார் 52% அமெரிக்கர்கள் டிரம்பை ஆதரித்தனர். இதன்மூலம் அவருக்கு ஒரு வலுவான மக்கள் ஆதரவு இருந்ததாகக் கருதப்பட்டது.
ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 40% ஆகக் குறைந்துள்ளது.
அப்படியானால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
இரண்டு முக்கிய காரணங்கள்: பொருளாதாரம் மற்றும் போர்.
ஆரம்பத்தில், இப்சாஸ் தரவின்படி, சுமார் 43% அமெரிக்கர்கள் டிரம்பின் பொருளாதார மேலாண்மையை ஒப்புக்கொண்டனர். இப்போது அது 29% ஆகக் குறைந்துள்ளது.
2024-இல் ஜனநாயக கட்சியின் தோல்விக்கு பொருளாதார அச்சமும் பங்களித்தது. கடந்த ஓராண்டாக குடியரசு கட்சியினர் அதிபர் பதவியையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது டிரம்பின் மதிப்பீட்டில் தாக்கம் செலுத்தி வருகிறது.
இரான் போர் தொடங்கி மூன்று வாரங்களுக்குள், பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு சுமார் 4 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது.
இந்தப் போர் டிரம்பின் ஆதரவில் திடீர் சரிவை ஏற்படுத்தவில்லை. ஆனால் பொருளாதார கவலைகளை அதிகரித்துள்ளது.
அவரின் அடிப்படை ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், மற்றவர்கள் அப்படியில்லை.
குயின்னிபியாக்கின் சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, குடியரசுக் கட்சி ஆதரவாளர்களில் 86% பேர் இரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கின்றனர். அதில் 80% பேர் டிரம்ப் அதை கையாளும் விதத்தையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் அனைத்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் இந்த எண்ணிக்கைகள் 39% மற்றும் 34% ஆகக் குறைகின்றன.
உண்மையான மாற்றம் கட்சி சாரா வாக்காளர்களிடமே உள்ளது.
2024 தேர்தலில் டிரம்புக்கு வெற்றியை அளித்த அவர்கள் தற்போது அவர்கள் அவரை விட்டு விலகி வருகின்றனர்.
இதே நேரத்தில், ஜனநாயகக் கட்சி மெதுவாக முன்னிலை பெறுகிறது.
தி டவுன்பேலட் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பு தேர்தல்களில், 2024 அதிபர் தேர்தலுடன் ஒப்பிடும்போது, அதே இடங்களில் ஜனநாயகக் கட்சி சராசரியாக 13% அதிகமாக செயல்பட்டுள்ளது.
பெரும்பாலான அமெரிக்க மக்கள் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க ராணுவ தலையீட்டுக்கு எதிராக இருந்தபோதிலும், இரான் உடனான போர் தொடங்கியதில் இருந்து டிரம்ப் மீதான 'ஏற்பு' மதிப்பீடு பெரிதாக சரியவில்லை. அதாவது அவருக்கான ஆதரவில் பெரியளவில் சரிவு இல்லை.
பியூ ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, பொருளாதார கவலைகளுக்கு மத்தியிலும் டிரம்பின் அரசியல் அடித்தளம் அவருக்கு ஆதரவாக இருப்பதே அதற்கு காரணம்.
வெளிநாட்டு சிக்கல்களில் இருந்து அமெரிக்காவை வெளியே கொண்டு வரும் அவரது தேர்தல் வாக்குறுதிகளைக் கடந்தும் கட்சியின் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து ஆதரவு கிடைப்பது டெக்சாஸில் நடைபெற்ற மாநாட்டில் வெளிப்பட்டது.
இதன் முக்கியத்துவம் என்ன?
அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன.
விலைகள் தொடர்ந்து உயர்ந்தால்…
போர் நீடித்தால்…
டிரம்பின் மிகப்பெரிய சவால் வெளிநாட்டு எதிரிகளல்ல,
உள்ளூரில் வாக்காளர்களை பாதிக்கும் பொருளாதாரமே ஆகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு