காணொளி: தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு அச்சமா?
காணொளி: தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு அச்சமா?
"எங்களுக்கு கழிவறைக்குக் கூட செல்ல கூட முடியாத நிலை உள்ளது"- கூட்டம் கூட்டமாக பெட்ரோல் பங்கை நாடி வரும் மக்களுக்கு இடையே பணியாற்றி வரும் விற்பனை நிலைய பணியாளர் ஆஷாவின் வார்த்தைகள் இவை.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம், உலக அளவில் எரிபொருள் விநியோகச் சங்கிலிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதன் அதிர்வலைகள் இப்போது தமிழகத்தின் வீதிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
நேற்று வரை சமையல் எரிவாயு சிலிண்டருக்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த மக்கள், இன்று பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் தவம் கிடக்கிறார்கள். "இன்று நிரப்பாவிட்டால் நாளை வண்டி ஓடாது" என்ற ஒருவித பதற்றம் அவர்கள் முகத்தில் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள களத்திற்கு சென்றது பிபிசி தமிழ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



