காணொளி: வேலூர் அருகே 60 அடி உயர பல்லக்கு கவிழ்ந்து 7 பேர் காயம்
காணொளி: வேலூர் அருகே 60 அடி உயர பல்லக்கு கவிழ்ந்து 7 பேர் காயம்
வேலூர் பாலாற்றில் மயான கொள்ளை திருவிழா முடிந்து திரும்பும் போது பல்லக்கு கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் பாலாற்றில் இருந்து மேம்பால சாலைக்கு ஏறும் போது பல்லக்கு திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. காயமடைந்தவர்களை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



