You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை குறித்து டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: ஹோர்மூஸ் நீரிணை குறித்து டிரம்ப் பேசியது என்ன?
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இரான் தொடர்பாக பேசினார்.
இரானுடன் "மிக நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று அவர் கூறினார். மேலும் ஈரான் "கடந்த 47 ஆண்டுகளாகச் செய்வது போலவே சற்று தந்திரமாக" நடந்து கொள்வதாக அவர் விமர்சித்தார்.
இரானியத் தலைவர்கள் "ஹோர்மூஸ் நீரிணையை மூட விரும்புகிறார்கள்", என கூறிய டிரம்ப், அவர்கள் "நம்மை மிரட்டுவதை" அமெரிக்கா அனுமதிக்காது என்றார்.
இரான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது,பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு