You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: முதியோர் இல்லத்தில் இருந்தவர்களை மகிழ்வித்த பென்குயின்கள்
ஹம்போல்ட் பென்குயின்களான பிரிங்கிள் மற்றும் விட்ஜெட் சில மனித நண்பர்களை சந்திக்க முதியோர் இல்லம் சென்றுள்ளார்கள்.
அதுகுறித்துப் பேசிய பென்குயின் பராமரிப்பாளர் பார்பரா மார்கெஸ், “விலங்குகளை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ளவர்களை சந்தித்து, சிறிது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் பயிற்றுவித்து, பழக்கப்படுத்தும் ஒரு தனியார் உயிரியல் பூங்காவில் நான் பணிபுரிகிறேன்.
ஒருமுறை ஓரிடத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கு இருந்தவர்கள் ‘ஓ இவர் பொதுவாகப் பிறருடன் அதிகம் கலந்துறவாட மாட்டாரா” என்றார். ஆனால், அந்த பென்குயின் தானாகவே அறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும் அந்த நபரின் முகம் மகிழ்ச்சியால் மலர்வதைக் காண முடிந்தது. அதுவொரு அழகான தருணம். பிறரை மகிழச் செய்வது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு