கடைசி வரை 'பயம்' காட்டிய இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு காரணமான அந்த ஒரு ஓவர்

கடைசி வரை 'பயம்' காட்டிய இங்கிலாந்து - இந்தியா வெற்றிக்கு காரணமான அந்த ஒரு ஓவர்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும்

இந்தியா நிர்ணயித்த 254 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை இறுதி ஓவர் வரை ஆட்டத்தில் நிறுத்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்களில் 33 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும், ஹர்திக் பாண்ட்யா நான்கு ஓவர்களில் 38 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இருவரின் பந்துவீச்சும் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்கு வகித்தன.

பெத்தேல்

பட மூலாதாரம், Getty Images

பெத்தேல் அற்புத இன்னிங்ஸ்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது

254 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.

இரண்டாவது ஓவரில் ஹார்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமல்லாமல், இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். நான்காவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் பேக்வேர்டு பாயிண்டில் ஒரு அற்புதமான கேட்சை எடுத்து ஹாரி ப்ரூக்கை அவுட்டாக்கினார். ப்ரூக் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தார், பும்ரா அவரது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

கடைசி வரை பயம் காட்டியது 'பெத்தேல்' - இந்தியாவின் வெற்றிக்கு காரணமான 2 ஓவர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆறாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை அடித்து இங்கிலாந்தை மீண்டும் போட்டிக்குக் கொண்டுவர ஜேக்கப் பெத்தேல் முயன்றார். இருப்பினும், வருண் சக்ரவர்த்தி அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜோஸ் பட்லரை வீழ்த்தினார், இதனால் இங்கிலாந்து அணி பின்தங்கிய நிலையில் இருந்தது. பவர்பிளேயில் இங்கிலாந்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்தது.

ஐந்து பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பெத்தேலுக்கு ஆதரவளிக்க பான்டன் முயன்றார், ஆனால் எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

8.1 ஓவர்களில் இங்கிலாந்து 100 ரன்களை கடந்தது. 11வது ஓவரில் 19 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார் பெத்தேல் .

253 ரன் அடித்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images

பெத்தேல் மற்றும் வில் ஜாக்ஸ் ஐந்தாவது விக்கெட்டுக்கு 39 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து மீண்டும் ஆட்டத்தில் கால் பதிக்கும் என்று தோன்றியது, ஆனால் அர்ஷ்தீப் சிங் 14வது ஓவரின் கடைசி பந்தில் ஜாக்ஸை ஆட்டமிழக்கச் செய்தார். ஜாக்ஸ் 35 ரன்கள் எடுத்தார்.

18வது ஓவரில் 6 ரன்கள் மட்டும் கொடுத்து பும்ரா போட்டியை விறுவிறுப்பாக்கினார். இந்த ஓவர்தான் வெற்றியை இந்தியாவுக்கு மிக நெருக்கத்தில் கொண்டுவந்தது. அதற்கு முன்பு வரை ஒவ்வொரு ஓவரிலும் இங்கிலாந்து அதிக ரன்கள் அடித்து வந்த நிலையில், இந்த ஓவர் முதல் அழுத்தம் இங்கிலாந்து மீது மேலும் அதிகரித்தது.

இந்தநிலையில், பெத்தேல் வெறும் 45 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். 19வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 9 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் பெத்தேல் 105 ரன்களுக்கு முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார்.

சிவம் துபே வீசிய கடைசி ஓவரில் இங்கிலாந்து 22 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இங்கிலாந்து ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

இந்தியாவின் ஆட்டம் எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்ட்யா ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்

இந்தியாவின் ஆட்டம் எப்படி?

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 39 ரன்களும், சிவம் துபே 43 ரன்களும் எடுத்தனர்.

சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது விக்கெட்டை வில் ஜாக்ஸ் வீழ்த்தினார்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்ட்யா 26 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். ஆர்ச்சர் நான்கு ஓவர்களில் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

இருப்பினும், வில் ஜாக்ஸ் மற்றும் ஆதில் ரஷீத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதில் ரஷித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆதில் ரஷீத்

சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் கூட்டணி

இந்தியா டாஸ் இழந்த நிலையில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஜோஃப்ரா ஆர்ச்சரின் முதல் ஓவரில் 12 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுக்க முயன்றது.

ஆனால் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், வில் ஜாக்ஸ் அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் அவரது இன்னிங்ஸை 9 ரன்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் சர்மா விரைவாக அவுட் ஆனபோதும் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை தந்தார்.

சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் ரன் விகிதத்தைப் பாதிக்காமல், அணியின் ஸ்கோரை வெறும் 4.3 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றனர்.

பவர்பிளேயில் இந்தியா 67 ரன்கள் எடுத்தது. இதற்குப் பிறகும், இரு வீரர்களும் வேகமாக ரன்கள் எடுத்தனர். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

சதத்தை தவற விட்ட சஞ்சு

இந்தியாவின் ஸ்கோர் வெறும் 8.3 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இருப்பினும், 10வது ஓவரின் மூன்றாவது பந்தில் கிஷன் மற்றும் சஞ்சுவின் பார்ட்னர்ஷிப்பை ஆதில் ரஷீத் முறியடித்தார். கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சஞ்சுவும் கிஷனும் இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தனர். கிஷன் ஆட்டமிழந்த பிறகும், சஞ்சு சாம்சன் மறுமுனையில் இருந்து தொடர்ந்து ரன்கள் எடுத்தார். அவருக்கு சிவம் துபே உறுதுணையாக இருந்தார்.

இந்தியா 253 ரன்கள் குவிப்பு

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், இந்த போட்டியிலும் சஞ்சு தனது சதத்தை எட்டத் தவறிவிட்டார், 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

சூர்யகுமார் பெரிதாக எதையும் செய்யத் தவறி, 11 ரன்களுக்கு ரஷித் பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். ரஷித் தனது நான்கு ஓவர்களில் 41 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரஷித் தனது நான்கு ஓவர்களில் 41 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் வழங்கிய தொடக்கத்தை சிவம் துபே வலுப்படுத்தினார். இருப்பினும், துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார், அதில் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். ஹர்திக் பாண்ட்யா 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து

இந்த அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதற்கிடையில், புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு