ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண்கள் கிரிக்கெட் அணி ஒன்று முதல்முறையாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்தியாவில் இந்த அணியின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பத்து நாள்கள் பயணத்தில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்றில் விளையாட உள்ளது.
பழங்குடியினரின் கிரிக்கெட் விளையாட்டானது பல இலட்சக்கணக்கான பங்கேற்பாளர்களோடு ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.








