காணொளி: காஸாவில் ஒரே குழந்தைக்கு 2 குடும்பத்தினர் உரிமை கோருவதால் சிக்கல்

காணொளிக் குறிப்பு, காஸாவில் ஒரே குழந்தையை உரிமை கோரும் 2 குடும்பத்தினர்
காணொளி: காஸாவில் ஒரே குழந்தைக்கு 2 குடும்பத்தினர் உரிமை கோருவதால் சிக்கல்

எகிப்தில் சிகிச்சை பெற்று காஸாவுக்கு திரும்பிய 2 வயது பாலத்தீன சிறுவனை, இரண்டு குடும்பங்கள் தங்களுடைய மகன் எனக் கூறுகின்றன.

முஹமது லுப்பாத் கூறுகையில், "எந்த சூழ்நிலையிலும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைக்கு நான் தயாராக இருக்கிறேன்.

இந்த பிரச்னைக்கு டி.என்.ஏ சோதனை தீர்வு தரும்." என்றார்.

அஹ்மது எல் ஹிர்ஷ் கூறுகையில், "2023 நவம்பரில் காஸா நகரின் அல்-ஷிபா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட 31 முன்கூட்டியே பிறந்த குழந்தைகளில் மஹ்மூத் ஒருவராக இருந்தார்." என்றார்.

இவர், பாத்திமா எல் ஹிர்ஷின் மகன் என்று நம்பப்படுகிறது; அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்திருந்தபோது இக்குழந்தை பிறந்தது. அதன் பிறகு இரண்டு நாட்களில் அவர் உயிரிழந்தார்.

பாத்திமாவின் கணவர் அஹ்மது, மஹ்மூதை சந்திக்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் காத்திருந்தார்.

மஹ்மூத் எகிப்தில் இருந்தபோது, அவர் வீடியோ கால் மூலம் பேசினார்.

ஆனால் இதே போன்ற கதையுடன் மற்றொரு தந்தையும் தனது மகனைத் தேடி வந்தார்.

குழந்தை பிறந்த நேரத்தில் இருவரும் அங்கே இல்லை. அவர்கள் இருவரும் காயமடைந்திருந்ததால், தங்கள் கர்ப்பிணி மனைவிகளிடம் இருந்து பிரிந்திருந்தனர்.

இந்த விவரங்களுக்கு பொருந்தும் அடையாளம் தெரியாத ஒரு வழக்கு இருந்ததாக அல்-ஷிபா மருத்துவமனை தெரிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு