காணொளி: இம்ரான் கானுக்கு என்ன ஆனது? குரல் கொடுக்கும் பிரபலங்கள்
காணொளி: இம்ரான் கானுக்கு என்ன ஆனது? குரல் கொடுக்கும் பிரபலங்கள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டுக்கு கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்றுகொடுத்தவருமான இம்ரான் கான் தற்போது ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அவரது (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியினர் ஒருசில இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். மேலும், ஐந்து நாடுகளை சேர்ந்த 14 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இம்ரான் கானின் உடல்நலத்துக்கு அப்படி என்னதான் பாதிப்பு? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



