You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தலா ரூ.21,000 மதிப்புள்ள 2,200 எறும்புகளை கடத்த முயன்ற நபருக்கு சிறை
காணொளி: தலா ரூ.21,000 மதிப்புள்ள 2,200 எறும்புகளை கடத்த முயன்ற நபருக்கு சிறை
சீனாவை சேர்ந்த பயணி தனது உடைமைக்குள் பதுக்கி 2,200 உயிருள்ள ராணி எறும்புகளை கடத்த முயன்றதால் கைது செய்யப்பட்டார். இது குயின் கார்டன் எறும்பு எனவும் அழைக்கப்படுகிது.
அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் சுமார் 8,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய எறும்புகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பெரிதும் மதிக்கப்படுகின்றன. அங்கு ஒரு எறும்பின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21 ஆயிரமாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் மறுத்த ஜாங் கெகுன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு