காணொளி: உயர்தர டேபிள் டென்னிஸ் வீரர்களை போட்டியில் வீழ்த்திய ஏஐ ரோபோ
காணொளி: உயர்தர டேபிள் டென்னிஸ் வீரர்களை போட்டியில் வீழ்த்திய ஏஐ ரோபோ
சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஏஸ் என்னும் ரோபோ, இந்த விளையாட்டை விளையாட புரோகிராம் செய்யப்படவில்லை. அப்படியிருந்தும், அது மிஷின் லெர்னிங்கை பயன்படுத்தி தானே கற்றுக்கொண்டது.
இந்த விளையாட்டில் சிறந்து விளங்க, விரைவான எதிர்வினைகளும் புலனுணர்வுத் திறன்களும் தேவை. இந்தத் திறன்கள் ரோபோக்களுக்கு இயல்பிலேயே வருவதில்லை.
இந்த ரோபோ, உயர்தர அமெச்சூர் வீரர்களுக்கு எதிராக விளையாடிய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றது. ஆனால், மிக உயர்ந்த நிலையிலுள்ள தொழில்முறை வீரர்களை எதிர்கொண்டபோது, ஒரு வெற்றியைக்கூட பெறாமல் இருமுறை தோல்வியடைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



