காணொளி: மகாராஷ்டிராவில் 'மெனோபாஸ்' கிளினிக் தொடக்கம் - பெண்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட மெனோபாஸ் கிளினிக்
காணொளி: மகாராஷ்டிராவில் 'மெனோபாஸ்' கிளினிக் தொடக்கம் - பெண்கள் கூறுவது என்ன?

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டம். நாற்பத்தைந்து வயதான அனிதா ஷிண்டே, தான் தற்போது ப்ரீமெனோபாஸ் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

இது மாதவிடாய் முற்றிலும் நிற்பதற்கு முந்தைய காலகட்டம். இந்த நேரத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உடலையும் மனதையும் பாதிக்கின்றன.

ஆனால் இந்த மாற்றங்கள் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை என்பதை அனிதா அறிந்திருக்கவில்லை. அவர் தனது மகளுடன் மாவட்ட மருத்துவமனையின் மெனோபாஸ் கிளினிக்கிற்கு வந்திருந்தார்.

மகாராஷ்டிரா முழுவதும் நகராட்சி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 500க்கும் மேற்பட்ட மெனோபாஸ் கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு