அமெரிக்கா – இரான் போரில் அடுத்து என்ன நடக்கும்? 4 சாத்தியங்கள்

முடிவு எட்டப்படாத அந்த விவாதங்கள் நடந்த ஒரு நாளுக்குள், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மையமாக விளங்கும் மூலோபாய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட முன்மொழியும் இரானுக்கு எதிரான தனது புதிய உத்தியை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 8-ஆம் தேதி, இரானும் அமெரிக்காவும் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, இது தெஹ்ரானில் கொண்டாட்டங்களைத் தூண்டியது.
    • எழுதியவர், சயீத் ஜாபரி
    • பதவி, அரசியல் ஆய்வாளர்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு குழு இரானியத் தலைநகரான தெஹ்ரானை வந்தடைந்துள்ள நிலையில், இரானுடன் இரண்டாம் கட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்கா விவாதித்து வருவதாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான் நடத்திய இருபது மணி நேரத்திற்கும் மேலான அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு முன்னேற்றமும் இன்றி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டு வார கால போர்நிறுத்தம் அமலில் உள்ளது.

ஒப்பந்தத்தை எட்டுவதில் ஏற்பட்ட இந்த ஆரம்பக்கட்ட தோல்வியையும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளையும் நாம் எவ்வாறு பார்க்க வேண்டும்?

இரானும் அமெரிக்காவும் கட்டுப்படுத்தப்பட்ட மோதலை நோக்கி நகர்கின்றனவா அல்லது ஒரு பெரிய போரை நோக்கிய தவிர்க்க முடியாத சரிவை நோக்கிச் செல்கின்றனவா?

அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதற்கான நான்கு சாத்தியமான சூழல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. 'தந்திரோபாய இடைநிறுத்தம்' என வரையறுக்கப்படும் நிலையற்ற போர்நிறுத்தம்

முடிவு எட்டப்படாத அந்த விவாதங்கள் நடந்த ஒரு நாளுக்குள், சர்வதேச எண்ணெய் வர்த்தகத்திற்கு மையமாக விளங்கும் மூலோபாய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிட முன்மொழியும் இரானுக்கு எதிரான தனது புதிய உத்தியை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

வாரக்கணக்கில் நீடித்த மோதலுக்குப் பிறகு, அமெரிக்க-இரான் போர்நிறுத்தம் இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான விருப்பத்தை உணர்த்துவதாகத் தோன்றியது.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே இது குறிப்பிடத்தக்க தெளிவற்ற தன்மைகளையும் கொண்டுள்ளது.

இதில் அடங்கும் இலக்குகளின் வகைகள் மற்றும் "போர்நிறுத்த மீறல்" என்பதற்கான வரையறை உள்ளிட்ட அதன் விதிமுறைகளை விளக்குவதில் உள்ள வேறுபாடுகள், இந்த ஒப்பந்தத்தை ஒரு நிலையான கட்டமைப்பாகக் கருதாமல் ஒரு தந்திரோபாய இடைவேளையாகப் பார்க்க சில ஆய்வாளர்களைத் தூண்டியுள்ளன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"மோதல் தொடங்கியவுடன், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தன" என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட 'ஜனநாயகத்தின் பாதுகாப்பு' என்ற அமைப்பின் மூத்த ஆய்வாளர் பெஹ்னம் பென் தலேப்லு கூறினார்.

"இவை, அமெரிக்காவுக்கும் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே பல ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் கோட்பாடுகள், நிலைப்பாடுகள் மற்றும் வழிமுறைகளின் தொகுப்பாகும். இந்த போர் அவற்றை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது" என்று அவர் பாரசீக சேவையிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், இரு தரப்பு அதிகாரிகளின் முரண்பட்ட கருத்துகள் இந்தச் சூழலின் நிலையற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளன.

இஸ்லாமியக் குடியரசின் அதிகாரிகள் போர்நிறுத்தம் தொடர்ச்சியாக மீறப்படுவது குறித்துப் பேசுகையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் உறுதிமொழிகள் குறித்து மிகவும் குறுகிய விளக்கத்தையே முன்வைக்கின்றன.

கருத்துகளில் உள்ள இந்த வேறுபாடு நம்பிக்கையின்மையை ஆழப்படுத்தியுள்ளதுடன், போர்நிறுத்தத்தின் நீடித்த தன்மை குறித்து சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கான முயற்சிகள் பலன் அளிக்காவிட்டால், இந்தப் போர்நிறுத்தம் என்பது சம்பந்தப்பட்ட தரப்பினர் சிறிது ஓய்வெடுக்கவும், மீண்டு வந்து குழுவாக இணையவும், நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் அடுத்த கட்டத்திற்குத் தயாராகவும் நேரம் பெறுவதற்கான ஒரு வழியாக மட்டுமே இருக்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

தற்போதைய சூழ்நிலையிலிருந்து தங்களுக்குக் குறைவான நன்மைகளே கிடைக்கின்றன என்றும், அழுத்தத்தை கணிசமாக அதிகரிப்பது அவசியம் என்றும் ஏதேனும் ஒரு தரப்பு முடிவு செய்தால், இத்தகைய சூழல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

உதாரணமாக, மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அல்லது எரிசக்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதை அமெரிக்கா ஒரு சாத்தியமான தேர்வாகக் கருதக்கூடும்.

இத்தகையத் தாக்குதல்கள் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை உருவாக்கினாலும், அவை பரந்த அளவிலான மனிதாபிமான மற்றும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும், மேலும் இரானிடமிருந்து வலுவான எதிர்வினையைத் தூண்டக்கூடும்.

அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகள் குறித்து மிகுந்த சந்தேகம் கொண்ட ஒரு தரப்பாக இருக்கும் இஸ்ரேல், செல்வாக்குமிக்க சக்தியாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

"பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட இரானைச் சேர்ந்த சில தனிநபர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடலாம்" என்கிறார் சர்வதேச உறவுகள் ஆராய்ச்சியாளர் ஹமித்ரேசா அசிசி.

மேலும், "டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் கொள்கை மோதலுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது" என்றும் அவர் கூறினார்.

நிலைமை தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்றாலும், ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டும் ஆபத்து மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தம் போன்ற அதன் அதிகப்படியான பாதிப்புகள், குறைந்தபட்சம் குறுகிய காலத்திலாவது இந்தச் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கக்கூடும்.

2. "நிழல் யுத்தம் "

"பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட இரானிய தனிநபர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடலாம்" என்கிறார் சர்வதேச உறவுகள் ஆராய்ச்சியாளர் ஹமித்ரேசா அசிசி.

பட மூலாதாரம், AFP via Getty Images

ஒருவேளை மிகவும் சாத்தியமானவற்றில் ஒன்று "கட்டுப்படுத்தப்பட்ட மோதல்" என்று விவரிக்கப்படக்கூடிய ஒரு வகை மோதல் நிலைக்குத் திரும்புவதாகும்.

அதாவது, இந்த மோதல் முழுமையான போரின் அளவுக்கு உயராது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்கவும் மாட்டார்கள் என்பதுதான் இதன் பொருள்.

இதனால், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் அடிக்கடி நடைபெறும் தாக்குதல்கள் முக்கியமாக கட்டமைப்பு வசதிகள், ராணுவ இலக்குகள் அல்லது விநியோக வழித்தடங்கள் மீது தொடர்ந்து நடைபெறக்கூடும்.

அப்போது ஆதரவு குழுக்களின் சக்திகளின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறும். இராக் அல்லது செங்கடல் பகுதியில் இரான் ஆதரவு குழுக்களின் மிகுதியான செயல்பாடுகள் மற்றும் இந்த வலைப்பின்னல்கள் மீது அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் ஆகியவை, மோதலின் தீவிரத்தை நேரடியாக அதிகரிக்காமல் மோதலின் நிலவியல் எல்லையை விரிவுபடுத்தக்கூடும்.

சில ஆய்வாளர்கள் இந்தச் சூழலை ஒரு "நிழல் யுத்தம்" என்று விவரிக்கிறார்கள்.

"இரு தரப்பினரும் ஒரு முழு அளவிலான போருக்குள் நுழையாமல், மற்றவர் மீது செல்வாக்கு செலுத்தத் தங்களின் விருப்பங்களையும் அழுத்தக் கருவிகளையும் பயன்படுத்த விரும்புகிறார்கள்" என்று ஹமித்ரேசா அசிசி பிபிசி பாரசீக சேவையிடம் தெரிவித்தார்.

"போர்நிறுத்தம் மீறப்பட்டால், இரான் தனது ஆதரவு குழுக்கள் மூலம் குறிப்பாக ஏமனில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்தச் சூழலில் அபாயங்களும் உண்டு. பதற்றம் அதிகரிக்கும் போது, தவறான கணக்கீடுகளுக்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. இரு தரப்பிலுமே மோதலைத் தீவிரப்படுத்தும் நோக்கம் இல்லையென்றாலும் கூட, ஒரு சிறிய தவறான முடிவு மோதலைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குத் தூண்டிவிடக்கூடும்.

விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் (நடுவில்), பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் (இடது) மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார் ஆகியோருடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார்.

பட மூலாதாரம், Pool/Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், ஒரு புதிய சுற்று ராஜ்ஜீய முயற்சிகள் இன்னும் நடைபெற வாய்ப்புள்ளது.

3. அமைதியான ராஜீய நடவடிக்கைகள் தொடர்கின்றன

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போதிலும், ராஜீய முயற்சிகள் முடிந்துவிட்டன என்றோ அல்லது பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகள் கைவிடப்பட்டுவிட்டன என்றோ இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாது.

இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்திய நாடு என்ற முறையில், பாகிஸ்தான் வரும் நாட்களில் இரான் மற்றும் அமெரிக்கா இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளைத் தொடர வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில், மோதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, கத்தார், ஓமன், சௌதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற சில பாரம்பரிய மத்தியஸ்தர்கள் செயல்படக்கூடும்.

இவர்கள் தகவல் தொடர்பு வழிகளாகச் செயல்பட்டு, நெருக்கடி திடீரெனத் தீவிரமடைவதைத் தடுக்க முற்படலாம்.

இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே உள்ள அடிப்படை இடைவெளிகளைக் குறைப்பதில்தான் இந்தப் பாதையில் ஏற்படும் எந்தவொரு முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.

அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவும், அதற்கு எதிராக இரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவும், இரு தரப்பினரும் இன்னும் ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவதை விடத் தங்கள் சொந்த திட்டங்களை திணிப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் நிலைகளில் இருந்து செயல்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

எனவே, ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற சாத்தியம் உண்டு என்றாலும், குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்காவது, விரைவான மற்றும் விரிவான ஒரு ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பது சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது.

அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவும், அதற்கு எதிராக இரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவும், இரு தரப்பினரும் இன்னும் ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவதை விடத் தங்கள் சொந்தக் கட்டமைப்புகளைத் திணிப்பதற்கே முன்னுரிமை அளிக்கும் நிலைகளில் இருந்து செயல்படுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால், வளைகுடா பகுதி, செங்கடல் மற்றும் ஓமன் வளைகுடா ஆகியவற்றில் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் என்று இரானிய ராணுவம் எச்சரித்துள்ளது.

4. நீடித்த கடற்படை முற்றுகை

இரான் துறைமுகங்கள் மீதான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. அதாவது இரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் அங்கிருந்து கிளம்பும் கப்பல்கள் தடுக்கப்படும் என அமெரிக்கா கூறுகிறது.

மேலும், ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க இரானுக்கு போக்குவரத்து கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வழிமறிப்போம் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இரானின் எண்ணெய் வருவாயைப் பறிக்கவும், அதன் பொருளாதாரத்தை முடக்கவும், அதே நேரத்தில் இரானிய எண்ணெயை முதன்மையாக வாங்கும் அமெரிக்காவின் முக்கியப் போட்டியாளரான சீனாவைப் பாதிப்பதையும் இந்த உத்தி நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

"இரானின் நீண்ட கடற்கரையைக் கருத்தில் கொண்டு, போதுமான உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் ஆய்வு வளங்கள் ஒதுக்கப்பட்டால், இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மீதான கடல்வழி முற்றுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று பெஹ்னம் பென் தலேப்லு கூறினார்.

"இத்தகைய நடவடிக்கையின் நடைமுறை விளைவு என்னவென்றால், அரசாங்கம் அதன் முதன்மைப் பொருளை ஏற்றுமதி செய்யும் திறனைப் பறிப்பதாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இத்தகைய கொள்கையால் அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க செலவுகளை மற்ற ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். இது அமெரிக்க ராணுவப் படைகளை இரானுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் என்றும், இதனால் அவர்கள் மீதான தாக்குதலுக்கான அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், கடற்படைகள் இரானின் எல்லைகளுக்கு அருகில் நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தப்பட வேண்டும், இது கணிசமான செலவுகளை உண்டாக்கும்.

இத்தகைய கொள்கையைப் பராமரிப்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் உயர வழிவகுக்கும். அதே சமயம் பாப் அல்-மண்டப் நீரிணை போக்குவரத்தை சீர்குலைக்க ஹூத்திகள் தலையிடுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்து, எண்ணெய் விலையை மேலும் உயர்த்தக்கூடும்.

இத்தகைய கொள்கையைப் பராமரிப்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் உயர வழிவகுக்கும். அதே சமயம் பாப் அல்-மண்டப் நீரிணையைச் சீர்குலைக்க ஹூதிகள் தலையிடுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்து, எண்ணெய் விலையை மேலும் உயர்த்தக்கூடும்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானும் அமெரிக்காவும் போர் மற்றும் பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் ஒரு கட்டத்திற்குள் நுழைந்திருக்கக்கூடும்.

இரு வழிகள்

இறுதியில், அந்தப் பகுதி தற்போது போர் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு இடையிலான எல்லை இதுவரை இல்லாத அளவுக்கு மங்கலாகி இருக்கும் ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பது தான் இந்த சூழ்நிலைகளிலிருந்து வெளிப்படும் முக்கிய கருத்து.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் தோல்வி என்பது ராஜீயத்தின் முடிவோ அல்லது ஒரு விரிவான போரின் திட்டவட்டமான தொடக்கமோ கிடையாது. மாறாக, இது ஒரு தெளிவற்ற சூழ்நிலை தொடர்வதையே சுட்டிக்காட்டுகிறது.

"இரு தரப்பினருமே இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும், குறுகிய காலத்தில் அது நடைமுறைப் படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தோன்றவில்லை" என்று ஹமித்ரேசா அசிசி கூறினார்.

இரானும் அமெரிக்காவும் போர் மற்றும் பேச்சுவார்த்தைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கும் ஒரு கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. இரு தரப்பினரும் ராணுவ வழிமுறைகளைத் தொடர்ந்து நம்பியிருக்கும் அதே வேளையில், ராஜீய வழித்தடங்களையும் ஓரளவிற்குத் எதிர்நோக்கியுள்ளனர்.

 உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு