காணொளி: இஸ்ரேல் தாக்கிய பெய்ரூட் நகரில் இடிபாடுகளுக்கு நடுவே இசை மீட்டும் கலைஞர்
காணொளி: இஸ்ரேல் தாக்கிய பெய்ரூட் நகரில் இடிபாடுகளுக்கு நடுவே இசை மீட்டும் கலைஞர்
இஸ்ரேல் குண்டுவீசி தாக்கும் லெபனான் தலைநகரின் மீளும் திறனை வெளிக்காட்ட, தெருக்களில் இசைப்பது உதவுவதாக மஹ்தி சஹேலி கூறுகிறார்.
ஹெஸ்பொலா ஆயுதக்குழு மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
நம்பிக்கை மற்றும் பிணைப்பையும் பரப்புவதே தன் நோக்கம் என சஹேலி கூறுகிறார்.
‘இசை ஆற்றுப்படுத்தவும் பொதுவான மனிதநேயத்தை நமக்கு நினைவூட்டவும் வல்லது’ என அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



