ஜல்லிக்கட்டு போராட்டம் : தீக்கிரையாக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் (புகைப்படத் தொகுப்பு)

நடுக்குப்பம்
படக்குறிப்பு, சிந்தனைச்சிற்பி என அழைக்கப்பட்ட சிங்காரவேலர் பிறந்த இடமான நடுக்குப்பத்தில் அரங்கேறிய வன்முறை
நடுக்குப்பத்தின் நுழைவாயிலிருந்த மீன்விற்பனைக்கூடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
படக்குறிப்பு, கருகிய மீன் விற்பனைக்கூடங்கள்
இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாகின.
படக்குறிப்பு, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் கருகின.
கடைகள் மட்டுமின்றி அதிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகின.
படக்குறிப்பு, அனைத்து பொருட்களும் தீயில் கருகின.
தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நடுக்குப்பம் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
படக்குறிப்பு, கேள்விக்குறியான வாழ்வாதாரம்
கடைகள் மட்டுமின்றி சாலையில் நின்றிருந்த வாகனங்களும் தீ கருகி நாசமாகியுள்ளன
படக்குறிப்பு, வாகனங்களும் தப்பவில்லை
சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப்பகுதியில் மட்டும் தீயில் கருகி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
படக்குறிப்பு, இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.
காவல்துறையை சேர்ந்தவர்கள் கடைகளுக்கு தீ வைத்தாக நடுக்குப்பத்தில் குடியிருப்போர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
படக்குறிப்பு, காவல்துறையினரே கடைகளுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டு
நடுக்குப்பம் ஆறாவது தெருவில் தீயில் கருகிப் போயுள்ள வாகனங்கள்.
படக்குறிப்பு, நடுக்குப்பம் ஆறாவது தெருவில்
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் அதனால் பயன் இருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
படக்குறிப்பு, புகார் கொடுத்தாலும் பயனில்லை என்பது மக்களின் கவலை
காவல்துறையின் அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக நடுக்குப்பம் கிராம மக்கள் தெவித்துள்ளனர்.
படக்குறிப்பு, மனித உரிமை ஆணையத்திடம் புகார்
தீக்கிரையான கடை ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் பைபிளின் வரிகள் ''நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்''
கேட்பொலிக் குறிப்பு, சென்னை போராட்டத்தில் வன்முறை: முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் பேட்டி
கேட்பொலிக் குறிப்பு, கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் விளக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்