காணொளி: தேர்தல் நடத்தை விதி அமல் - தலைமைச் செயலகத்தில் முதல்வர் படம் அகற்றம்
காணொளி: தேர்தல் நடத்தை விதி அமல் - தலைமைச் செயலகத்தில் முதல்வர் படம் அகற்றம்
தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி வெளியாகிறது.
இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் படம் அகற்றம் செய்யப்படும் காட்சி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



