காணொளி: புலி கன்றைக் கொன்ற இடத்துக்கு அழைத்து சென்ற பசு

காணொளிக் குறிப்பு, காணொளி: கன்றைக் கொன்ற புலி, வனத்துறைக்கு வழிகாட்டிய பசு
காணொளி: புலி கன்றைக் கொன்ற இடத்துக்கு அழைத்து சென்ற பசு

புலியால் கொல்லப்பட்ட தனது கன்று, இறந்த இடத்திற்கு அதன் தாய் பசு வழிகாட்டி அழைத்துச் சென்றது.

இந்த சம்பவம் தெலங்கானாவில் உள்ள இதுகலா பஹாட் காடுகள் அருகே நிகழ்ந்தது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகோஜி பீம் ராவ் என்பவருக்குச் சொந்தமான பசுவும் அதன் கன்றும் பிப்ரவரி 15 அன்று இந்தக் காட்டிற்கு மேய்ச்சலுக்குச் சென்றன. ஆனால், அன்று மாலை பசு மட்டும் வீட்டிற்குத் திரும்பியது. கன்றுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ என்று சந்தேகித்த பீம் ராவ், இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

பிப்ரவரி 16 அன்று, அந்த பசுவை மீண்டும் காட்டிற்குள் சுதந்திரமாக விட்டு, வன ஊழியர்கள் மற்றும் கிராம மக்களுடன் அதைப் பின்தொடர்ந்து சென்றார். அது அவர்களை புலி தன் கன்றைத் தாக்கிய இடத்திற்கே அழைத்துச் சென்றதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு