காணொளி: பிரிட்டனில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விளையாடும் பழங்கால கால்பந்து
காணொளி: பிரிட்டனில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விளையாடும் பழங்கால கால்பந்து
இந்த பழங்கால கால்பந்து விளையாட்டில் நூற்றுக்கணக்கானோர் விளையாடுகிறார்கள்.
நகரிலுள்ள கடைகள், பப்கள் சேதங்களைத் தவிர்க்க தடுப்புகளை அமைத்துக் கொள்கின்றன.
ராயல் ஷ்ரோவெடைட் (Royal Shrovetide) கால்பந்து, 12ஆம் நூற்றாண்டில் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் விளையாடப்படுகிறது.
அப்’ஆர்ட்ஸ், டவுன்’ஆர்ட்ஸ் ஆகிய இரு அணிகள், இரண்டு நாட்களில் நகரின் எதிர் முனைகளுக்குப் பந்தை நகர்த்தப் போட்டியிடுகின்றன.
வீரர்கள் ஆற்றின் எந்தக் கரையில் பிறந்தார்கள் என்பதைப் பொறுத்து தாங்கள் சேரும் அணியைத் தேர்வு செய்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



