காணொளி: 'அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பரிசை இரான் அளித்தது' - டிரம்ப்
காணொளி: 'அமெரிக்காவுக்கு மிகப் பெரிய பரிசை இரான் அளித்தது' - டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவர்கள் நேற்று செய்தது உண்மையிலேயே அசாதாரணமானது.
அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசளித்தார்கள்.
அந்த பரிசு இன்று வந்தது.
அது மிகவும் பெரியது.
அதன் மதிப்பு மிக அதிகமானது.
அந்த பரிசு என்ன என்பதை நான் சொல்லப் போவதில்லை.
ஆனால் அது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.
அவர்கள் அதை கொடுப்பதாக முன்பே சொன்னார்கள், அதை கொடுத்தார்கள்.
அதனால் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது;
நாம் சரியானவர்களுடன் தான் வேலை செய்கிறோம்.
அது அணுசக்தி தொடர்பானதா?
இல்லை, அது அணுசக்தி தொடர்பானதல்ல.
அது எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பானது.
அவர்கள் செய்தது மிகவும் நல்ல செயல்.
ஆனால் அது நாம் சரியானவர்களுடன் தான் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



