காணொளி: "பேச்சுவார்த்தை நடத்த திட்டம் இல்லை" - இரான்
காணொளி: "பேச்சுவார்த்தை நடத்த திட்டம் இல்லை" - இரான்
பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என, இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அவர்கள் (அமெரிக்கா) சில யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
சில இடங்களில் அதை 15 அம்ச திட்டம் என்று கூறப்பட்டதாக நான் பார்த்தேன், ஆனால் அவை பல்வேறு முன்மொழிவுகளாகவே வழங்கப்பட்டன.
இந்த எல்லா முன்மொழிவுகளும் நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், எங்கள் நிலைப்பாடு பின்னர் தீர்மானிக்கப்படும்.
தற்போதைக்கு, தொடர்ந்து எதிர்த்து நிற்பதும், நாட்டை பாதுகாப்பதும் எங்கள் கொள்கையாகும்.
இப்போது பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை. இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



