ஜி-20 மாநாட்டிற்காக அர்ஜெண்டினாவில் குவியும் உலகத் தலைவர்கள் (புகைப்படத் தொகுப்பு)

ஜி20 மாநாட்டை ஒட்டி அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அர்ஜெண்டினா தலைநகர் பெய்னோசிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான எல்லையில் நிலவும் அகதிகள் பிரச்சனை, கஷோக்ஜி தொடர்பாக சௌதி அரேபியா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், ரஷ்யா - யுக்ரேன் இடையே நிலவும் பதற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் திட்டம் ஆகிய விவகாரங்கள் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உலகின் ஆதிக்கம் மிக்க 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறவுள்ளது.

தனது மனைவி சோஃபி கிரேகோயருடன் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அண்டை நாடுகளான அமெரிக்கா, மெக்ஸிகோவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தனது மனைவி சோஃபி கிரேகோயருடன் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அண்டை நாடுகளான அமெரிக்கா, மெக்ஸிகோவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு முன்னதாகவே தனது மனைவியுடன் பெய்னோசிற்கு வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், அந்நாட்டில் 1976-1983 காலக்கட்டத்தில் நடந்த ராணுவ ஆட்சியின்போது கொல்லப்பட்ட/ காணாமல்போன 30,000 பேரின் நினைவாக கட்டப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்டார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மாநாட்டிற்கு முன்னதாகவே தனது மனைவியுடன் பெய்னோசிற்கு வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், அந்நாட்டில் 1976-1983 காலக்கட்டத்தில் நடந்த ராணுவ ஆட்சியின்போது கொல்லப்பட்ட/ காணாமல்போன 30,000 பேரின் நினைவாக கட்டப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை அர்ஜெண்டினா வந்தடைந்தனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை அர்ஜெண்டினா வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் மற்ற பிரச்சனைகளை விட, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது சீன பிரதமர் ஷி ஜின்பிங்கிற்கு சவாலாக இருக்குமென்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்த மாநாட்டில் மற்ற பிரச்சனைகளை விட, அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது சீன பிரதமர் ஷி ஜின்பிங்கிற்கு சவாலாக இருக்குமென்று கருதப்படுகிறது.
பத்திரிகையாளர் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளின் அழுத்தத்திலுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது சல்மான் புதன்கிழமையே பெய்னோஸ் வந்தடைந்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பத்திரிகையாளர் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளின் அழுத்தத்திலுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது சல்மான் புதன்கிழமையே பெய்னோஸ் வந்தடைந்தார்.
இந்த மாநாட்டின் இடையே சமீப காலமாக மோசமடைந்துள்ள சௌதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது சல்மானை, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் சந்தித்து பேசுவார் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்த மாநாட்டின் இடையே சமீப காலமாக மோசமடைந்துள்ள சௌதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது சல்மானை, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் சந்தித்து பேசுவார் என்று கருதப்படுகிறது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கச்சா எண்ணெய் விலையில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்றத்தன்மை தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 'யோகா' நிகழ்ச்சியொன்றில் மோதி பங்கேற்றார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கச்சா எண்ணெய் விலையில் சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்றத்தன்மை தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 'யோகா' நிகழ்ச்சியொன்றில் மோதி பங்கேற்றார்.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினாவிற்கு கிளம்பிய ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கலின் விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பயணம் தாமதமாகியுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினாவிற்கு கிளம்பிய ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கலின் விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பயணம் தாமதமாகியுள்ளது.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான ஓட்டெடுப்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதமர் தெரீசா மே ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா வந்தடைந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான ஓட்டெடுப்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதன் பிரதமர் தெரீசா மே ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா வந்தடைந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: