ஒமிக்ரான் கொரோனா வைரஸ் திரிபு பற்றி 58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் வெளியானதா?

பட மூலாதாரம், @BeckyCheatle twitter
கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை?
இதற்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளுக்கு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எழுத்துகளில் வைத்த உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுக்கு ''ஒமிக்ரான்'' என்று பெயர் வைத்தது. இதை ''கவலைக்குரிய திரிபு'' என்றும் வகைப்படுத்தியுள்ளது.
இதையடுத்து தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பல நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இந்தியாவில் விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஒமிக்ரான் குறித்த தேடல்களும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதன்படி, "தி ஒமிக்ரான் வேரியன்ட்" என்கிற பெயரில் சினிமா ஒன்று 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது என்று நெட்டிசன்கள் பகிர்ந்தனர். இது வைரலாகியது.
இந்திய அளவில் முக்கிய இயக்குநராக அறியப்பட்டுள்ள ராம்கோபால் வர்மாவும், ''இதை நம்பினால் நம்புங்கள். இந்த படம் 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது. டேக்லனை பாருங்கள்," என்று பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Twitter
அவர் ட்விட்டரில் பகிந்திருந்த போஸ்டரில் "உலகம் கல்லறயாகிய நாள்" என்கிற,டேக்லைன் இருந்தது.
இதைத் தொடர்ந்து பலரும் வேகமாக பகிர்ந்து, இதை வைரலாக்கினர். ஆனால், இது உண்மையில்லை.
இது குறித்த நமது உண்மை கண்டறியும் முயற்சியில் உறுதியாகியுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த இயக்குநரும் எழுத்தாளருமான பெக்கி சீட்டில், கடந்த நவம்பர் 28ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில், சில திரைப்பட போஸ்டரில் சில திருத்தங்களை போட்டோஷாப்பில் செய்து பகிர்ந்தார். எழுபதுகளில் வந்த படங்களின் போஸ்டரில் ''தி ஒமிக்ரான் வேரியன்ட்'' எனத் தாம் போட்டோஷாப் செய்ததாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை ஆதாரமாக் கொண்டு பலரும் பகிர்ந்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், "இதை நான் விளையாட்டாக செய்தேன். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்," என்கிற அவரது மறு பகிர்வை கவனிக்க தவறி விட்டனர். இந்த விளக்கத்தை டிசம்பர் 1ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்தார்.
1963ம் ஆண்டு யுகோ கிரிகோர்டி எனும் இத்தாலிய திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் 'ஒமிக்ரான்' என்கிற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. இது ஓர் அறிவியல் புனைவு கதை. ஆனாலும் இதற்கும் கொரோனா திரிபு ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை.
பிற செய்திகள்:
- சூரிய கிரகணம்: டிசம்பர் 4ம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்?
- மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம்
- இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பதில் என்ன சிக்கல்? அரசாணை சொல்வது சரியா?
- 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
- இணைய வெளியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா தமிழ்நாடு அரசு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












