கேரளா வெள்ளம்: அவலநிலையை சொல்லும் புகைப்படங்கள்
கடந்த நூறு ஆண்டுகளில் கேரளா மிக மோசமான வெள்ள பாதிப்பைச் சந்தித்திருக்கிறது என்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. பலர் வீடுகளை இழந்துள்ளனர். முந்நூறுக்கும் அதிகமானோர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கென மத்திய அரசு முதற்கட்ட தற்காலிக நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இந்தியாவின் பல மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு சில கோடிகளை கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
கேரள வெள்ளத்தின் அவல நிலையை கேள்விப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்டுகள் பிரதமர் '' கேரள மக்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழங்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் கேரளா சகோதரர்களுக்கு உதவுவது கடமை'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செயற்பாட்டாளர்களும், தன்னார்வலர்களும் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
வெள்ள சேதத்தையும், அது குறித்த செய்திகளையும் வெளி உலகின் பார்வைக்கு எடுத்து சென்றதில் புகைப்படகலைஞர்களின் பணி மகத்தானது.
கேரளாவின் மிக மோசமான வெள்ள பாதிப்புகளை புகைப்படம் மூலம் உலகுக்குக் தெரியப்படுத்தி வருகிறார்கள் புகைப்பட கலைஞர்கள். இன்று உலக புகைப்பட தினம். கேரளா வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்த சிறு புகைப்படத் தொகுப்பை வாசகர்களுக்கு இங்கே வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Hindustan Times

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Hindustan Times

பட மூலாதாரம், NDRF Officials

பட மூலாதாரம், NDRF Officials

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












