பூத் சிலிப் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் எந்தவொரு தேர்தல் வாக்குப்பதிவிற்கும் முன்பாக வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலம் பூத் ஸ்லிப் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
https://electoralsearch.eci.gov.in/pollingstation என்கிற தேர்தல் ஆணையத்தின் முகவரிக்குச் சென்று உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டால் உங்கள் வாக்குச்சாவடி எதுவென்பது வந்துவிடும்.
வாக்குச்சாவடியை அடையாளம் கண்ட பிறகு என்ன செய்வது?
வாக்குச்சாவடிக்குச் சென்ற பிறகு அங்கு தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களிடம் அந்த வாக்குச்சாவடியின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர் பட்டியல் இருக்கும். அதில் உங்களின் பெயரை வரும் வரிசை எண்ணை உறுதி செய்து வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த ஆவணங்களில் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் என்ன செய்வது?
வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறவில்லை என்றால் அவர் வாக்களிக்க முடியாது.

















