காணொளி: வெயிலால் உருகிய தார் - சாலையோடு ஒட்டிய செருப்புகள்

காணொளிக் குறிப்பு, கடும் வெயிலால் உருகிய தார்
காணொளி: வெயிலால் உருகிய தார் - சாலையோடு ஒட்டிய செருப்புகள்

குஜராத்தில் கடும் வெயில் காரணமாக சாலையில் இருந்த தார் உருகத் தொடங்கியது.

இதனால் சாலையில் நடந்து சென்ற மக்களின் செருப்புகள் ஒட்டிக்கொண்டன. ஒரு பெண்ணை தூக்கிச்செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சூரத் - டவர் சவுக் பகுதிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் 39.9 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானது.

தாரோடு ஒட்டிக்கொண்ட செருப்புகளை மக்கள் கஷ்டப்பட்டு இழுத்து எடுத்தனர். இந்தாண்டு இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவி வருவதாக இந்திய வானியல் துறை தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு