காணொளி: "இன்னும் முடிவடையவில்லை" - இரான் குறித்து டிரம்ப் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, "இன்னும் முடிவடையவில்லை" - இரான் குறித்து டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: "இன்னும் முடிவடையவில்லை" - இரான் குறித்து டிரம்ப் பேசியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இப்போது அவர்கள்(இரான்) தங்கள் கடற்படை மற்றும் விமானப் படையை இழந்துவிட்டார்கள்.

அவர்களிடம் வானிலிருந்து வரும் தாக்குதலை தடுக்க எந்த பாதுகாப்பு அமைப்பும் இல்லை. அவர்களிடம் ரேடார் இல்லை.

அவர்களுடைய தலைவர்கள் இப்போது இல்லை.

நாங்கள் இதைவிட இன்னும் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும்.

சில முக்கிய இடங்களை நாங்கள் இன்னும் தாக்காமல் விட்டுள்ளோம். விரும்பினால் இன்று பிற்பகலிலோ அல்லது ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அவற்றை அழிக்க முடியும்.

அப்படி செய்தால், அந்த நாட்டை அவர்கள் மீண்டும் கட்டியெழுப்பவே முடியாது.

வரலாற்றில் எந்த நாடும் சந்திக்காத அளவுக்கு நாங்கள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளோம். இன்னும் இது முடிவடையவில்லை." என்றார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு