காணொளி: ‘நேட்டோ இதுவரை இல்லாத அளவு வலுவாக உள்ளது’- மார்க் ரூட்ட
காணொளி: ‘நேட்டோ இதுவரை இல்லாத அளவு வலுவாக உள்ளது’- மார்க் ரூட்ட
“பாதுகாப்பு முதலீடுகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நேட்டோ இதுவரை இல்லாத அளவு தற்போது மிக வலிமையாக உள்ளது.” நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்ட தெரிவித்துள்ளார்.
“2025-ல் முதல்முறையாக அனைத்துக் கூட்டணி நாடுகளும், 2014-ல் ஒப்புக்கொண்ட இலக்கை எட்டியுள்ளன. அதாவது, தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2% தொகையைப் பாதுகாப்பிற்காக முதலீடு செய்துள்ளன.
பல நாடுகள் இந்த இலக்கைத் தாண்டியும் முதலீடு செய்துள்ளன. 2024 உடன் ஒப்பிடுகையில், 2025-ல் ஐரோப்பா மற்றும் கனடா, பாதுகாப்பிற்காகச் செய்த செலவு 20% அதிகரித்துள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



