காணொளி: ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

காணொளிக் குறிப்பு, காணொளி: ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றன?
காணொளி: ஏவுகணைகளை இடைமறிக்கும் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?

மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதில் இருந்து வளைகுடா நாடுகள் மீது இரான் 3,000-க்கும் மேற்பட்ட டிரோன்களையும் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த தாக்குதல்கள் ஏவுகணை இடைமறிக்கும் தொழில்நுட்பம் மூலம் முறியடிக்கப்பட்டன.

வளைகுடா நாடுகள், டிரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும் அவற்றை பயன்படுத்துகின்றன.

இந்த பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன?

செயற்கைக்கோள்களும் நிலத்தில் உள்ள ரேடார்களும் வான்வெளியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அங்கு ஊடுருவும் பொருள்களைக் கண்டறிகின்றன

வேகம், திசை, உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பொருள் அச்சுறுத்தலாக கருதப்பட்டால் கட்டுப்பாட்டு மையங்கள் அதன் பாதையைக் கணக்கிட்டு, அதைச் சுட்டு வீழ்த்த சரியான நேரத்தை தீரமாக்கின்றன.

இடைமறிக்கும் ஏவுகணைகளை லான்ச்சர்கள் ஏவுகின்றன. ரேடார் தொடர்ந்து அச்சுறுத்தலாக வரும் பொருளையும், இடைமறிக்கும் ஏவுகணையையும் கண்காணித்து, அவற்றின் இருப்பிடங்களை ஒரு வினாடிக்கு பலமுறை உடனுக்குடன் update செய்கிறது.

சில இடைமறிக்கும் ஏவுகணைகள் வெடிபொருட்களை சுமந்து செல்கின்றன. ஆனால் புதிய மற்றும் அதிகத் திறன் கொண்ட Hit-to-kill வகை ஏவுகணைகள், கைனட்டிக் (kinetic) ஆற்றலை எதிரிகளின் ஏவுகணையை வீழ்த்துகின்றன

ஆனால், மிகச்சிறந்த இடைமறிப்பு ஏவுகனைகளுக்கும் கூட சில வரம்புகள் உள்ளன.

ஏவுகணைகள் மற்றும் டிரோன்களுக்கு எதிராக அவை அதிக பலன் தருவதில்லை.

மேலும் ஓர் இடைமறிப்பு ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, மீண்டும் ஒன்றை ஏவ தயார் செய்ய சில நிமிடங்கள் எடுப்பது, தாக்குதல் நடத்தப்படுவதற்கான ஒரு வாய்ப்பை அது ஏற்படுத்துகிறது.

இவை மிகவும் விலை உயர்ந்தவை ஒரு பேட்ரியாட் (patriot) இடைமறிக்கும் ஏவுகணையின் விலை சுமார் 40 லட்சம் டாலர்கள் ஆகும். ஆனால் இதுவே ஒரு டிரோனின் விலை 50 ஆயிரம் டாலர்களுக்கும் குறைவானது தான்,

மலிவான டிரோன்களை வீழ்த்த அதிக விலை கொண்ட இடைமறிப்பு ஏவுகணைகளை பயன்படுத்துவது, வளம் மிக்க நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்யலாம்

அதனால் தான், வளைகுடா நாடுகள் தங்களின் தேசியப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல், மக்களின் உயிரையும் உள்நாட்டுக் கட்டமைப்புகளையும் பாதுகாக்க, யுக்ரேனின் மலிவான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு