காணொளி: "அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை” - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, "அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை” - டிரம்ப்
காணொளி: "அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகளின் உதவி தேவையில்லை” - டிரம்ப்

இன்று வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "எங்களுக்கு உதவி தேவையில்லை. என்னைப் பொருத்தவரை, இந்த போர் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய முதல் நாளிலிருந்தே நாங்கள் பல முக்கிய இலக்குகளை அழித்துவிட்டோம்.

ஓரிரு நாட்களில் அவர்களின் கடற்படையை செயலிழக்கச் செய்தோம். ஆனால், இது மிகவும் முக்கியமான செயல் என்று நேட்டோ முழுமையாக ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாரும் "இதை செய்யக்கூடாது" என்று சொல்லவில்லை.

நாங்கள் பி-2 விமானங்களால் அணுசக்தி திறனை தாக்கவில்லை என்றால், ஒரு மாதத்தில் அவர்கள் (இரான்) அணு ஆயுதம் பெற்றிருப்பார்கள். அதை அவர்கள் 'அணு தூசு' என்று அழைக்கிறார்கள். அதனால், நேட்டோ மிகவும் பெரிய தவறு செய்கிறது என்று நான் நினைக்கிறேன்.நேட்டோ எப்போதாவது எங்களுக்கு ஆதரவாக இருக்குமா என்று நான் யோசிக்கிறேன். அதனால், இது ஒரு பெரிய சோதனை, எங்களுக்கு அவர்கள் தேவையில்லை." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு