காணொளி: தூத்துக்குடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
காணொளி: தூத்துக்குடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து
தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, வாகைக்குளம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் இறங்கியதால் அனைவரும் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



