காணொளி: கத்தார் மீது இரான் தாக்குதல் - ஒன்றுகூடிய அரபு நாடுகள்
காணொளி: கத்தார் மீது இரான் தாக்குதல் - ஒன்றுகூடிய அரபு நாடுகள்
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான சவுத் பார்ஸ் மீது கடந்த புதன்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து கத்தார், சௌதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல்வேறு வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதலை நடத்தியது.
இதில், கத்தாரின் ராஸ் லஃபான் தொழில்துறை பகுதியும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில், கத்தாருக்குக் கணிசமான சேதம் ஏற்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கத்தார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், இரானின் முக்கிய எரிவாயு வயலை தகர்ப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? இந்தக் காணொளியில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



