காணொளி: நெடுஞ்சாலைக்கு வழி விட வீட்டை 76 மீட்டர் நகர்த்திய நபர்

காணொளிக் குறிப்பு, காணொளி: நெடுஞ்சாலைக்கு வழி விட வீட்டை 76 மீட்டர் நகர்த்திய நபர்
காணொளி: நெடுஞ்சாலைக்கு வழி விட வீட்டை 76 மீட்டர் நகர்த்திய நபர்

புதிய நெடுஞ்சாலைக்கு வழி விடுவதற்காக பஞ்சாபில் ஒருவர் தனது வீட்டை 76 மீட்டர் நகர்த்தியுள்ளார்.

இரண்டு மாடி வீடு ஹைட்ராலிக் ஜாக்ஸ் (Hydraulic Jacks) மூலம் தூக்கப்பட்டு அது இருந்த இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறை வீட்டின் உரிமையாளருக்கு பணம் தர தயாராக இருந்தாலும் அவர் வீட்டை இடிக்க மறுத்துவிட்டார்.

பாரத் மாலா திட்டத்தின் கீழ் வரும் சாலையின் குறுக்கே இந்த வீடு இருந்துள்ளது.

நிபுணர்கள் கூறுகையில், வீட்டை நகர்த்தும் இந்த செயல்முறை வீட்டின் அமைப்பை பலவீனப்படுத்தி வீட்டின் மேல்பகுதி மற்றும் சுவர்களை சேதப்படுத்தும் மற்றும் நிலநடுக்கத்தை தாங்கும் வீட்டின் திறன் குறைந்துவிடும் என கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு