காணொளி: ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட ராணுவத்தினர்

காணொளிக் குறிப்பு, 150 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட ராணுவத்தினர்
காணொளி: ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்தவரை மீட்ட ராணுவத்தினர்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை சூழல் சுற்றுலா மையம் இயங்கி வருகிறது. அங்கு சென்ற செங்கல்பட்டு மாவட்டச் சேர்ந்த சிவகுருநாதன் என்ற சுற்றுலா பயணி செல்ஃபி எடுக்கும் போது 150 அடி பள்ளத்திற்குள் தவறி விழுந்தார். வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முஜய்ரசியில் ஈடுபட்டனர். அனால் அவர்களால் மீட்க முடியாமல் போகவே ராணுவ வீரர்கள் இரவோடு இரவாக 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டனர். பின்னர் அவர் உதகை அரசு மருவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வ வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு