காணொளி: 'மிகவும் பயங்கரம்' - இரான் தாக்குதல் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, "மிகவும் பயங்கரம்" - இரான் தாக்குதல் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து
காணொளி: 'மிகவும் பயங்கரம்' - இரான் தாக்குதல் பற்றி இஸ்ரேல் மக்கள் கருத்து

இரான் செலுத்திய ஏவுகணைகள் இஸ்ரேலின் சில பகுதிகளைத் தாக்கின. அதைப்பற்றி ஒருவர் விவரித்துப் பேசுகையில், "அலாரம் ஒலித்ததும் நான் பாதுகாப்பு அறையில் இருந்தேன். சுமார் 4 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டது. நாங்கள் மிகவும் பதற்றமடைந்தோம். தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது.சில நிமிடங்கள் காத்திருந்து, சேதங்களை பார்க்க வெளியே சென்றோம்."

"கடந்த 2 ஆண்டுகளில் ராக்கெட் தாக்குதல்களால் சேதம் ஏற்பட்டது இது முதல் முறை அல்ல. வெளியே சென்றபோது, தரையில் ஒரு பெரிய குழியை பார்த்தோம். மிகச் சிறிய ராக்கெட்டால் கூட அதிக சேதம் ஏற்பட்டது. இது மிகவும் பயங்கரமாக இருந்தது." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு