காணொளி: இரான் மீதான அமெரிக்க தாக்குதல் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
இரான் உடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "இரானில் நாங்கள் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறோம். 0 - 10 வரை இருந்தால் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள்? என ஒருவர் கேட்டார்.
அதற்கு நான், நான் 12 முதல் 15 வரை கொடுப்பேன் என்றேன். அவர்களின் (இரான்) படை முழுவதும் இல்லாமல் ஆனது. அவர்களின் கடற்படை இல்லை, தகவல் தொடர்பு அமைப்புகள் இல்லை, தலைவர்களும் இல்லை.
அவர்களின் 2 தலைமுறை தலைவர்கள் இல்லாமல் போயுள்ளனர்; இப்போது மூன்றாம் தலைமுறை மட்டுமே இருக்கிறது. அவர்களின் விமானப்படை முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது.
சிந்தித்து பாருங்கள். அவர்களிடம் 32 கப்பல்கள் இருந்தன; அந்த 32 கப்பல்களும் இப்போது கடலுக்கு அடியில் மூழ்கியுள்ளன." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



