காணொளி: இரான் மீதான தாக்குதலை பேர்ல் ஹார்பருடன் ஒப்பிட்ட டிரம்ப்

காணொளிக் குறிப்பு, இரான் மீதான தாக்குதலை பேர்ல் ஹார்பருடன் ஒப்பிட்ட டிரம்ப்
காணொளி: இரான் மீதான தாக்குதலை பேர்ல் ஹார்பருடன் ஒப்பிட்ட டிரம்ப்

''இரான் மீது தாக்குதல் நடத்தும் முன் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளிடம் போரைப் பற்றி ஏன் சொல்லவில்லை? ''என டிரம்பிடம் கேட்கப்பட்டது

''அதிகம் சமிக்ஞை காட்ட விரும்பவில்லை. தாக்குதலை தொடங்கிய போது கடுமையாக தொடங்கினோம். யாரிடமும் அதை பற்றி சொல்லவில்லை. ஏனென்றால் ஆச்சரியப்படுத்த விரும்பினோம். ஆச்சரியத்தைப் பற்றி ஜப்பானை விட யாருக்கு நன்கு தெரியும்? பேர்ல் ஹார்பர் தாக்குதல் (1941-ல் அமெரிக்கா மீது ஜப்பான் நடத்திய தாக்குதல்) பற்றி நீங்கள் ஏன் சொல்லவில்லை?

ஆச்சரியப்படுத்துவதில் நீங்கள் எங்களைவிட அதிகம் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நாங்கள் அவரை ஆச்சரியப்படுத்த வேண்டியிருந்தது. அப்படியே செய்தோம். அதனால் முதல் இரண்டு நாட்களில் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக, 50% அளவிற்கு அழித்தோம். நான் போய் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தால் ஆச்சரியம் இருக்காது அல்லவா?'' என டிரம்ப் அதற்கு பதில் அளித்தார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு