காணொளி: லெபனானில் கட்டடத்தை தாக்கி அழித்த இஸ்ரேல் - கள நிலவரம் என்ன?
காணொளி: லெபனானில் கட்டடத்தை தாக்கி அழித்த இஸ்ரேல் - கள நிலவரம் என்ன?
பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு கட்டடம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஹெஸ்பொலா தலைவர்களை மட்டுமல்லாமல், அந்த அமைப்பின் நிதி ஆதாரங்களையும் அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. செய்தியாளர்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகிலுள்ள இந்தக் கட்டடம் தாக்கப்படுவதற்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகக் கருதப்பட்டாலும், லெபனான் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஹெஸ்பொலா ஆயுதக் குழுவை வீழ்த்த இஸ்ரேல் உறுதியாக உள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 800-க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



