காணொளி: 'அரசியல்வாதி விருப்பத்திற்காக ஒரு நாடு காணாமல் போகாது' - கத்தார்

காணொளிக் குறிப்பு, "ஓர் அரசியல்வாதியின் விருப்பத்திற்காக ஒரு நாடு காணாமல் போனது" - கத்தார் வெளியுறவு அமைச்சகம்
காணொளி: 'அரசியல்வாதி விருப்பத்திற்காக ஒரு நாடு காணாமல் போகாது' - கத்தார்

கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த பகுதியில் இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்கிறார்கள். யாரும் எங்கும் போய்விடப் போவதில்லை. முழுமையான அழிவு என்பது ஒரு தெரிவு இல்லை. எந்தவொரு அரசியல்வாதியின் விருப்பத்திற்காகவோ அல்லது தன்னிச்சையான முடிவுக்காகவோ ஓர் இனமோ அல்லது ஒரு நாடோ காணாமல் போகாது. நாங்கள் (கத்தார் & இரான்) ஒருவருக்கொருவர் அருகில் தான் இருக்க போகிறோம். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்காக நாங்கள் அண்டை நாடுகளாகவே இருப்போம், ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்வதற்கான வழிகளை நாங்கள் கண்டறிய வேண்டும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு